தமிழ்நாடு

tamil nadu

சங்கரன்கோவில் திருவிழா - கோயில் யானை பிடிமண் எடுக்கும் வைபவம்; திரளானோர் பங்கேற்பு!

By

Published : Apr 24, 2023, 8:13 PM IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று ( ஏப்.24 ) கோயில் யானை கோமதி பெருங்கோட்டூரில் பிடிமண் எடுக்கும் வைபவம் நடைபெற்றது.

Etv Bharat பெருங்கோட்டூரில் பிடிமண் எடுக்கும் வைபவம்
Etv Bharat பெருங்கோட்டூரில் பிடிமண் எடுக்கும் வைபவம்

பெருங்கோட்டூரில் பிடிமண் எடுக்கும் வைபவம்

தென்காசி:ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதானமிக்க சிவத் திருத்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சங்கர நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்து தங்களது பரிகாரங்களை செய்து செய்கின்றனர்.

மிக முக்கிய அதிகார தலங்களாகவும் இது விளங்குகிறது. பல்வேறு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வகையில் ஆடித்தபசுத்திருவிழாவின் அடுத்தபடியாக சித்திரைத்திருவிழா பெரும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு நடந்து வருகிறது. சித்திரைத் திருவிழாவிற்கு முன்னதாக சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் யானை கோமதி அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்குச் சென்று, பிடி மண்ணை எடுத்து வரும் வைபவம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோமதி யானை பிடிமண் எடுப்பதைக் கண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா நாளை (ஏப்.25) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதனையொட்டி கோலாகலமாக நடைபெற இருக்கும் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடாக யானை பிடிமண் எடுக்கும் வைபவம் இன்று ( ஏப்.24 ) நடைபெற்றது. சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இருந்து சந்திரசேகர சுவாமி கோமளா அம்பிகையுடன் சப்பர பவனியாக, சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு ஆறு கி.மீ., நடந்து சென்ற கோயில் யானை கோமதி, பிடிமண் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு யானை பிடி மண் எடுக்கும் வைபவத்தைக் கண்டு தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் சுவாமி–அம்பாள் காலை, மாலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த திருவிழா சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் நாளை காலை 5.15 மணியளவுக்கு மேல் 6.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 9ஆம் திருநாளான மே 3ஆம் தேதி நடக்க இருக்கிறது.

திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருவிழாவிற்கு முன்பாக முன்னேற்பாடுகள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க:Madurai Chithirai Festival: மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது.. மீனாட்சி அம்மன் புகைப்படத்தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details