தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா: பக்தர்களின்றி கொடியேற்றம் - சங்கரநாராயண சுவாமி கோயில்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Sankarankovil
Sankarankovil

By

Published : Jul 13, 2021, 12:11 PM IST

Updated : Jul 13, 2021, 12:51 PM IST

தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தவசு திருவிழா 12 நாட்கள் நடைபெறும். 11ஆம் திருநாள் அன்று நடைபெறும் "ஆடித்தவசு காட்சி"யைத் தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

கரோனாவால் பக்தர்களின்றி தொடங்கிய தவசுத்திருவிழா

கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, ஆடித்தவசு திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், நிகழாண்டில் பொது முடக்கத் தளர்வுகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் பக்தர்கள் இன்றி ஆடித்தவசு திருவிழா இன்று (ஜூலை.13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்

கொடிப்பட்டம் உள் பிரகாரம் சுற்றி வந்ததும் கோமதி அம்பாள் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் கொடிமர பீடத்திற்கு தர்ப்பைப்புல், மலர்களால் அலங்கரித்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆடி வெள்ளிக்கிழமை: 19 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் அம்மனுக்கு அலங்காரம்

Last Updated : Jul 13, 2021, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details