தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தைத் தவிர்க்க களமிறங்கிய தென்காசி போக்குவரத்து காவல் துறையினர்

தென்காசி மாவட்டத்தில் வேகத்தடைகளின் மீது தீட்டப்பட்டிருக்கும் வெள்ளை நிறம் சரியாக தெரியாத காரணத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவியது. இதனைக் கருத்திற்கொண்டு தென்காசி போக்குவரத்து காவல் துறையினர் வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வண்ணங்களைத் தீட்டினர்.

tenkasi traffic police officers
தென்காசி போக்குவரத்து காவல் துறையினர்

By

Published : Jan 17, 2022, 10:10 PM IST

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது சற்று பெரிய அளவிலான வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட மற்றும் ஏற்கெனவே இருந்த வேகத்தடை தெரிவதற்காக அதன்மேல் தீட்டப்பட்டிருக்கும் வெள்ளைக்கோடுகள் சரிவர தெரியாத காரணத்தினால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், நேற்று (ஜனவரி 16) முழு ஊரடங்கை முன்னிட்டு, தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து விபத்துகள் ஏற்படாத வண்ணம் வேகத்தடைக்கு மேல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களைத் தீட்டினர்.

போக்குவரத்து காவல் துறையினரின் இச்செயலை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்க வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details