தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமத்துவபுரங்கள் புதுப்பிக்கப்படும் -  அமைச்சர் பெரியகருப்பன் - tenkasi news

தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Rural minister
அமைச்சர் பெரியகருப்பன்

By

Published : Jul 15, 2021, 7:55 AM IST

தென்காசி : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் கலந்துகொண்டார்.

அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழக மாநில வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 1,892 பயனாளிகளுக்கு 9 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ், முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், "எதிர்க்கட்சியும் பாராட்டும் அளவிற்கு திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளன. உதாரணமாக கரோனா நோய் தொற்றை தீவிர நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

சமத்துவபுரங்கள் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்

ஜாதி, மத கலவரங்கள் நடைபெற கூடாது என்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் சமத்துவபுரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

விரைவில் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் புதுப்பிக்கப்படுவதுடன், புதிய சமத்துவபுரங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்" என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மாணவர்களை ஏமாற்றுவதை இப்போதாவது திமுக நிறுத்துமா?'

ABOUT THE AUTHOR

...view details