தென்காசி: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு - கேரள எல்லையான தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் நேற்று (மார்ச். 16) தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் - தென்காசியில் ரூ. 30 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
தமிழ்நாடு - கேரள எல்லையான தென்காசி அருகே அரசுப்பேருந்தில் பயணித்த நபரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டதில், தென்காசியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற பயணியிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்ததை அடுத்து, காவல் துறையினர் அப்பணத்தை பறிமுதல் செய்து, செங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். செங்கோட்டை வட்டாட்சியர் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க :'யானைக்கு சப்போர்ட் பண்ணுங்க' - பிஞ்சுக் குரலில் கெஞ்சும் குழந்தை