தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ளது காமராஜர் அரசு கலைக்கல்லூரி, இக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல கிராமங்களில் இருந்தும் வந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும், நேற்றும்(நவ-16) ஒரு சில ரவுடிகள் இந்த கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ரவுடிகளால் தொல்லை இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க கோரியும் சில மாணவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருப்பினும் நேற்று (நவ-16) காலை கல்லூரி செல்ல காத்துக் கொண்டிருந்த சில மாணவர்களை குறிவைத்து அந்த ரவுடிகள் தாக்கத் தொடங்கினர்.