தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 10:34 AM IST

ETV Bharat / state

தென்காசியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்!

House roof collapsed in rain: தென்காசியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்!
தென்காசியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்!

தென்காசியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து…அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பத்தினர்!

தென்காசி:கடையநல்லூர் பகுதி மேல கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோயில் தெருவில் நடராஜன் மகன் அருள்மொழி என்பவருக்குச் சொந்தமான பழமையான இரண்டு வீடுகள் உள்ளது. அவர்களது வீட்டில் கூலித்தொழிலாளி மாரியப்பன் (42), அவரது மனைவி மாடத்தி மற்றும் மகன் ராமர், இசக்கி மணிகண்டன், மகள் மகிதாவுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் நேற்று இரவில் வீட்டின் கதவை அடைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது, இரவு 2 மணி அளவில் மழை பெய்துள்ளது. அப்பொழுது வீட்டில் உள்ளே மேல் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியதால், கணவர் மாரியப்பன் மட்டும் வீட்டில் தூங்கி உள்ளார். மனைவி மாடத்தி மற்றும் குழந்தைகள் வெளியில் உள்ள திண்ணையில் படுத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென வீட்டின் மேற்பகுதி கான்கிரீட் முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் மீது மேல்கூரை விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளார். அவரது மூன்று பிள்ளைகளும், மனைவியும் வீட்டில் வெளியே திண்ணையில் படுத்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷேக் அப்துல்லா தலைமையிலான தீயணைப்புப் படை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்த மாரியப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கடையநல்லூர் தாசில்தார் கங்கா, ஆய்வாளர் கருப்பசாமி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டை பார்வையிட்டு உறுதித்தன்மை இல்லாத பழமையான வீடு என்பதால், வீட்டில் குடியிருக்கும் அனைவரையும் காலி செய்ய வேண்டும் என கடையநல்லூர் தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், கடையநல்லூர் பகுதியில் வீட்டின் நடுவே மேற்கூரை இடிந்து விழுந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும், லேசான காயங்களுடன் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியதை தொடர்ந்து மலை அதிகரித்து உள்ளதால், தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமானத்தின் கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details