தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைன் போரை நேரடியாக பார்த்தோம் - தென்காசி மாணவர்கள் - viladimir putin

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய தென்காசி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் போரை நேரடியாக பார்த்தோம்-தென்காசி மாணவர்கள்
உக்ரைன் போரை நேரடியாக பார்த்தோம்-தென்காசி மாணவர்கள்

By

Published : Mar 8, 2022, 12:57 PM IST

தென்காசி:உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் போர் காரணமாக அவதியுற்று வருகின்றனர். அங்குள்ள மாணவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்கத் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை தங்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை திமுக-வினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர். மேலும் போர் குறித்து மீண்டு வந்த மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற பகுதியில் இருந்த போது 5 நாட்களாகப் போரை நேரடியாகப் பார்த்ததாகக் கூறினர். மேலும் தாங்கள் இருந்த பகுதிக்கு அருகிலேயே குண்டு வெடிப்பு நடந்ததாகவும், பதுங்குகுழியில் தங்கி உயிர் பிழைத்ததாகவும் கூறிய அவர்கள் பிறகு மாணவர்களாக ஒன்று சேர்ந்து உக்ரைன் எல்லையே கடந்து வந்ததாகத் தெரிவித்தனர். தமிழ்நாட்டிலேயே மருத்துவ படிப்பைத் தொடர உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

உக்ரைன் போரை நேரடியாக பார்த்தோம்-தென்காசி மாணவர்கள்

இதையும் படிங்க:உயிரைக் காத்துக்கொள்ள செல்போன் வெளிச்சத்தில் மைனஸ் 2 டிகிரி குளிரில் நடந்தோம்..!

ABOUT THE AUTHOR

...view details