தென்காசி மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சீவலப்பேரி குளம். அழகான தோற்றம் கொண்ட இந்த குளம், நாளடைவில் ஆக்கிரமிப்புகள், கழிவு நீர் கலப்பு ஆகியவற்றால் பொழிவிழந்து, அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும், இந்த குளத்தை நம்பி சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசான நிலங்கள் இருந்தன.
இந்நிலையில், குளத்தை சீரமைக்க பலர் முயற்சி மேற்கொண்ட நிலையில், இந்த குளத்தை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி செயற்பொறியாளர் சகாய இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, இந்த குளத்தின் பராமரிப்பு புனரமைப்பிற்காக சுமார் ரூ. 70 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக இந்த ஆய்வு நடைபெற்றதாக தகவல் தெரிவித்தனர்.