தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2021, 2:25 PM IST

ETV Bharat / state

தென்காசி அணைகளிலிருந்து இன்று பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு!

தென்காசி: அணைகளிலிருந்து இன்று (ஜூன் 14) பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கார் பருவ சாகுபடிக்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா நதி, 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி, 132 அடி கொள்ளவு கொண்ட அடவிநயினார், 72 அடி கொள்ளவு கொண்ட கருப்பா நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி கடனா நதியிலிருந்து வினாடிக்கு 125 கன அடி, ராம நதியிலிருந்து வினாடிக்கு 60 கன அடி தண்ணீரை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதன்மூலம் 40 கிராமங்களிலிருந்து எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண் நிலம் நேரடியாகப் பாசன வசதி பெறவுள்ளது.

பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

மேலும் அடவிநயினார் அணையிலிருந்து வினாடிக்கு 60 கன அடி, கருப்பா நதியிலிருந்து 25 கனஅடி தண்ணீரும் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் தண்ணீரானது வேளாண் பாசனத்திற்கு இன்றுமுதல் இந்த மாத இறுதிவரை திறந்துவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாருக்கு கொறடா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி?

ABOUT THE AUTHOR

...view details