தென்காசி: சங்கரன்கோவிலில் இன்று (அக்.16) புதிய தமிழகம் கட்சியின் சார்பில் காவிரி தண்ணீர் பிரச்சனையை குறித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் “காவிரி நீர் பிரச்னை சுமார் 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.
மேலும் குருவை சாகுபடி விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது அதிகப்படியான இடங்களில் மழை இல்லாததினாலும், குளங்கள், ஏரிகள், கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் தற்பொழுது தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாகவே காணப்படுகிறது.
இது குறித்து தற்பொழுது ஆளக்கூடிய திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை பெற்று தரவேண்டும். அவ்வாறு பெற்று தராவிட்டால் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும்” எனவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் டெல்டா மாவட்டங்கள் அதிகமாக பாதிப்படைந்து உள்ளதால், காவிரி தண்ணீரை உடனடியாக பெற்று தருமாறு இதில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக காவல்துறையினர் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “ I.N.D.I.A கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீர் பிரச்னையை தீர்க்க முன் வராமல் மௌனம் சாதித்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் உள்ளனர். இந்த காவிரி தண்ணீர் வராததினால் 10 லட்சம் விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.