தென்காசி:முன்னாள் பாஜக மாவட்ட தலைவரும், தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான ராமராஜா (48) புளியங்குடி அருகே தலைவன்கோட்டை பகுதியில் அதிகாரி வீட்டு தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இளம்பெண் ஒருவர், அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் குழந்தைகளுடன், மாமனார் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த இலம்பெண்ணை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ராமராஜா மாடி வழியாக இளம்பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி சென்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அந்த இளம்பெண் குடும்பத்தாருடன் புளியங்குடி காவல் நிலையதில் புகார் அளித்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட புளியங்குடி போலீசார் தலைமறைவாக உள்ள பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜாவை தேடி வருகின்றனர்.