தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடத்தும் தைப்பூச பிரமோற்சவ விழா பிரசித்தி பெற்றது. உள்ளுரிலும், சுற்று வட்டாரத்திலும் உள்ள ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி மேற்கொள்வார்கள். பத்து நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழாவினை நடத்துவார்கள்.
இந்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி, கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 18ஆம் தேதி தைப்பூசம் அன்று தேரோட்டம், பின்னர் 20ஆம் தேதி தெப்ப திருவிழா நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. தற்போது, கரோனா தொற்று அதிகரிப்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தளங்களும் அரசு வழிகாட்டுதல்படி மூடப்பட்டுள்ளன.
கோயிலுக்குள் திருவிழா
இக்கோயில்களில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வருடம் தைப்பூச பிரமோற்சவ விழாவில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களின் திருவிழாக்கள் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.