தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சீவலமுத்து மகன் முருகன் என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு சிலர் கொடுப்பதாகக் கூறி அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று பிரச்னை செய்துள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் முருகன் என்ற மற்றொரு நபர் இங்கு பிரச்னை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளர்.
இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னை ஆட்டோ ஓட்டுநர் மிரட்டுவதாகக் கூறி சீவலமுத்து மகன் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
உடனே உதவி காவல் ஆய்வாளரும் சீவலமுத்து மகனுக்கு ஆதரவாகச் சென்று ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்தார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி காவல் உதவிஆய்வாளரிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு காவலர் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதனால் இன்று (அக். 17) அப்பெண் தாம் வசிக்கும் பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துக் கொண்டு, சீவலமுத்து மகன், காவல் உதவிஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜாதி பெயரைச் சொல்லி துன்புறுத்தல்: ராணுவ வீரரின் மகள் கண்ணீர்