தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முக்கிய நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட தடை' - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தென்காசி: நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'Public ban on major water bodies'
'Public ban on major water bodies'

By

Published : Jul 19, 2020, 10:40 PM IST

நாளை (ஜூலை20) ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக நாளை ஆடி அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் செய்ய பொதுமக்களுக்கு யாரும் முக்கிய நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் அவ்வேளையில் அங்கு நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது.

ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் கரோனா தொற்று அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், பொதுமக்கள் நலன் கருதி நாளை ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்நிலைகளில் ஒன்று கூடுவதையும், ஆறு மற்றும் நீர்நிலைகளில் நீராடுவது தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details