தென்காசி: சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடிதபசு விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. நாளை (ஜூலை 23) கோயிலில் ஆடித்தபசு விழா நடைபெற உள்ள நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், மண்டகபடி பூஜைதார்கள் மட்டும் அடையாள சீட்டுடன் அனுமதிக்கபடுவர் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.