தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி: தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - Tenkasi district news

தென்காசி: சித்த மருத்துவமனைக்கு 10 கோடி நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Jul 20, 2020, 4:57 PM IST

தென்காசி மாவட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூலிகைச் செடிகளுடன் இன்று (ஜூலை20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவத்தில் நிலவேம்பு, சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தி, அதற்குத் தடுப்பு மருந்து கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்காகச் சித்த மருத்துவமனைக்கு முதற்கட்டமாக 10 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன் அவர்கள் குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மனுவாக மாவட்ட நிர்வாகத்திடம் அளித்தனர்.

இதையும் படிங்க: எட்டு வழிச் சாலை வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details