தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தென்காசி: கரோனாவை காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்டித்தும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Sep 8, 2020, 2:40 PM IST

சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு கரோனாவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதயக் கோளாறு, சுவாசப் பிரச்னைகள், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மகப்பேறு போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் நாடினால் அரசு மருத்துவர்கள் தொற்றை காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்காமல் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் மருத்துவம் செய்யாமலேயே வீடுகளில் நோயுடன் முடங்கி கிடப்பதாக கூறி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து தென்காசி மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 200க்கும் மேற்பட்டவர்கள் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையான நோயாளிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனால் உடல் அளவில் பலவீனமடைந்திருக்கும் நோயாளிகள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு உயிர்விடும் சூழல் ஏற்படுகிறது. எனவே தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், தேவையான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் மருத்துவம் குறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details