தென்காசி:சுரண்டை அரசு கல்லூரியில் வணிகவியல் துறையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தட்ட மாணவி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இதற்கிடையே இன்று காலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வரும் பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.