தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொல்லை கொடுத்த அடுத்த பாதிரியார் கைது; சிக்கியவரும் குமரி மாவட்டம்! - தென்காசி மாவட்ட செய்தி

தென்காசி அருகே தேவாலயத்துக்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 22, 2023, 10:48 PM IST

தேவாலயத்துக்கு வரும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட பாதிரியார் கைது

தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள சிவகாமிபுரம் என்ற கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் நாகர்கோவில் தடிக்காரன்கோணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக போதகராக இருந்து வருகிறார். இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களின் கைப்பேசி எண்களை பெற்று மத போதனை செய்கிறேன் என்கிற பெயரில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தேவாலயங்களுக்கு சுற்று வட்டார கிராமத்தில் இருந்து ஏராளமான பெண்கள் வருவது வழக்கம். அப்போது பாதிரியார் வரும் பெண்களிடம் லாவகமாகப் பேசி, அவர்களுடைய நம்பரை வாங்கிக் கொண்டு அவர்களுடன் தொலைபேசியில் தவறாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதில் சில பெண்கள் வெளியில் தெரிந்தால், அவப்பெயர் ஏற்படும் என்று நினைத்து, மௌனமாக இருந்ததால் பாதிரியாரின் தொல்லை நாளுக்கு நாள் எல்லை மீறி போனது.

இதனை இன்னும் கண்டு கொள்ளாமல் இருந்தால் நமக்கு அவமானம் ஏற்படும் என தேவாலய வளாகத்தில் இருக்கும் இளம் பெண்கள் அதை தங்களுடைய பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சபை மக்கள் சார்பாக பெத்தநாடார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த பெண் ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று பாதிரியார் மீது புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பாவூர்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் கவிதா விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் பாதிரியார் மீது வன்முறையால் பெண்களை மானபங்கம்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவு வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மத போதகர் பெனடிக்ட் ஆன்றோ தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலய மத போதகர் குறித்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தும், அதனைத் தொடர்ந்து கைது சம்பவமும் நடைபெற்றுள்ளது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மின்வேலியில் சிக்கி விவசாயி பலி - மின் வேலியில் சிக்கியவரை காப்பற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் பேரவையில் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details