தென்காசி மாவட்டம் புளியரை அருகே கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கான சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்தப் பகுதி வழியாக கேரள மாநிலத்தில் இருந்து நோய் வாய்ப்பட்டு இறந்து விடும் தருவாயில் இருந்த சுமார் 10 ஆயிரம் கோழிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் வருவதாக காவல் துறையயினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவல் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புளியரை வழியாக நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த அந்த கோழிகளை தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்ததாகவும், கோழிகளுக்கு உரிய மருத்துவர் சான்று இல்லாமல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.