தென்காசி:தென்காசி யானை பாலம் சிக்னல் அருகே உள்ள சிற்றாறு படித்துறை பகுதியில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், உயிரிழந்து கிடப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தென்காசி போலீசார், உயிரிழந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், படித்துறை பகுதியில் இருந்த சாமி சிலையை வைத்து தலையில் அடித்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.