தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்மாயில் மணல் கொள்ளை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - தென்காசி மாவட்ட குற்றச் செய்திகள்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே கண்மாயில் டிப்பர் லாரிகள் , ஜேசிபி இயந்திரம் கொண்டு மணல் அள்ளிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட  வாகங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள்

By

Published : Sep 27, 2020, 9:44 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேவுள்ள காரிசாத்தான் பகுதியில் பொதுப்பணி துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயிலிருந்து மணல் அள்ளப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகங்கள்

அங்கு, மணல் அள்ளிக்கொண்டிருந்த கும்பல் காவல் துறையினரின் வருகையை அறிந்து, அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஆறு டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டர், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்மாயில் மணல் அள்ளிய கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடி, உதை!

ABOUT THE AUTHOR

...view details