தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவபெருமாள் (60). இவரது தவறான நடத்தை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக குடும்பத்தினராலும், சமுதாயத்தினராலும் ஒதுக்கி வைக்கப்பட்டார். மூன்று திருமணங்கள் செய்திருந்த நிலையிலும், அவரின் தவறான நடத்தை காரணமாக மனைவிகள் யாரும் அவருடன் சேர்ந்து வாழவில்லை.
இந்நிலையில் இவர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தானாக சென்று உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த திங்கட்கிழமை (அக்.19) மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம், சிவபெருமாள் மரணம் தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது.