தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி; பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு! - tenkasi police filed a case against fireworks shop

தென்காசி: சங்கரன்கோவிலில் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரித்த ஆலை உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ase
ase

By

Published : Oct 15, 2020, 7:46 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வெள்ளாகுளம் கிராமத்தில் மயில் முருகன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் விருதுநகரில் பச்சையப்பபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன்(57) என்பவர் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் தொழிளாளர்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் கீழ் அமர்ந்து பட்டாசு தயாரிப்பதாக வெள்ளகுளம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் பட்டாசு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், தொழிலாளர்கள் மரத்தின் கீழ் அமர்ந்து பட்டாசு தயாரிப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, வெள்ளாகும் கிராம நிர்வாக அலுவலர் திருவேங்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயச்சந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details