தென்காசி: தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஊரடங்கு காரணமாக உணவின்றி இருப்பதை அறிந்து, காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று, குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து, அவருக்கு உணவு வழங்கி அனுப்பிவைத்தனர்.