தென்காசிமாவட்டம் திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக்குளம் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிக்குக் கிராம மக்கள் காவல்துறையிடம் அனுமதி கோரிய போது அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், குறிஞ்சாக்குளம் கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலத்திற்கு இன்று (டிச.31) பேரணியாக வந்தனர். இதனையடுத்து, வட்டாட்சியரிடம் தங்களது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்தனர்.
விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி மறுப்பு; குடும்ப அட்டைகளை ஒப்படைத்த கிராம மக்கள் இதனிடையே, தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குறிஞ்சாக்குளம் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:15 நாள்கள் விடுமுறை: குஷியில் மாணவர்கள்