கணவன் மீது புகாரளிக்க வந்த பெண்...சாதியின் பெயரை சொல்லி தாக்கிய பெண் எஸ்.ஐ? தென்காசி:ஆலங்குளம் அருகே உள்ள வீரகேரளம்புதூரை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர் கேரளாவில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வயது 44, ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக 44 வயது மதிக்கத்தக்க பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகக் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தனது மனைவியுடன் வாழ மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, 44 வயது மதிக்கத்தக்க பெண் ஆலங்குளம் அனைத்து மகளிர் காலல்துரையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ளுவதற்காக பெண்யை போலீஸ் நிலையத்திற்கு நேரில் அழைத்துள்ளனர். அப்போது, பணியில் இருந்த காவல் துணை ஆய்வாளர் தேவபிரியா, பெண் அளித்த மனுவைக் கிழித்து கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பெண்ணின் உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். சிகிச்சை மேற்கொண்டதில் பெண்ணின் பற்களில் காயம் ஏற்பட்டு ஒரு பல் ஆடியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் “கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில், தன்னுடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து இருந்தேன். இது குறித்து விசாரணை செய்வதற்காகக் காவல் நிலையம் வருமாறு என்னை அழைத்தார்கள். அப்போது, என்னுடைய கணவரும் இருந்தார். அவரிடம் விசாரணை செய்து கொண்டு இருக்கும் போது ஏன் இப்படிப் பொய் பேசுகிறீர்கள்? என கேட்டதற்குக் காவல் உதவி ஆய்வாளர் தேவபிரியா, என்னை அடித்துத் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், என்னிடம் விசாரணை நடத்தாமல் நான் அளித்த மனுவைக் கிழித்தெறிந்து, தன்னுடைய சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினார்.
தங்களுக்கு ஒரு பிரச்சனை என்பதால் தான் மகளிர் காவல்நிலையம் செல்கிறோம். ஆனால், காவல் நிலையத்திலும் எங்களை அவமதித்தால் நாங்கள் என்ன செய்வோம்? தன்னுடைய கணவர் மீதும் தன்னை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் தேவபிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காயம் அடைந்த பெண் கோரிக்கை வைத்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையை போல் புகார் அளிக்க வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பாழடைந்த வீட்டில் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு..! கர்நாடகாவில் நடந்தது என்ன?