தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்கள் மட்டுமே டார்கெட்.. சிவகிரி பகுதியில் சிக்கிய பலே திருடன்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு! - thief from the temple at tenkasi

Sivagiri Temple Theft: சிவகிரி அருகே இரவு நேரங்களில் கோயில்களில் திருடிய திருடனை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகிரி கோயிலில் திருட்டு
பாலமுருகன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 8:17 AM IST

சிவகிரி கோயிலில் திருட்டு

தென்காசி:கோயில்களை குறி வைத்து தொடர்ச்சியாக திருடி வந்த நபர், சிவகிரி அருகே பேச்சியம்மன் கோயிலில் திருட சென்ற நிலையில், ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே, நெல்கட்டும்செவல் காட்டுப்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). இவர், கோயில்களில் உள்ள உண்டியல்களை உடைத்து, அதில் உள்ள பணம் மற்றும் கோயிலில் அம்மன் தாலி, சூலம், கண்காணிப்பு கேமரா, கணினி மற்றும் பித்தளை பொருட்களை திருடிச் செல்வதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சிவகிரி காவல் சரகத்தில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் நேற்று (நவ.19) இரவு 10 மணியளவில், கோயில் கதவுகளை உடைத்து திருட முயற்சி செய்த நிலையில், கோயில் அருகே வயல்காட்டில் இருந்த விவசாயிகள், சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து, சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பழனியில் களைக்கட்டிய திருக்கல்யாணம்: காணக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

இதனையடுத்து, புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில், சிவகிரி காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையில், தட்சிணாமூர்த்தி, சிங்கத்துரை மற்றும் காவல்துறையினர் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலில் திருட முயற்சி செய்தவரை, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல் துறையினர் பிடித்தனர்.

தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர் கடந்த இருபது நாட்களுக்கு முன்பாக, சிவகிரி கொத்தாடப்பட்டி, தொப்பை கிழவன் சுடலைமாடன் கோயிலில், 3 கிராம் மதிப்புள்ள தங்கத்தாலி கண்காணிப்பு கேமரா மற்றும் கணினி திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, இவரிடமிருந்து சுமார் 14.820 கிராம் தங்க பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்குள் புகுந்து சாமி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு: மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு..

ABOUT THE AUTHOR

...view details