தென்காசி: புளியரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புளியரை சோதனைச்சாவடி வழியாகத் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், குட்கா புகையிலைப் பொருள்கள், மது பாட்டில்கள், அரிசி போன்ற கடத்தலைத் தடுக்கும்விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் விருதுநகரிலிருந்து கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக ரேசன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.