தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருட்டில் இறங்கிய பரோட்டா கடை ஓனர்.. வலை வீசிப்பிடித்த போலீசார்.. - பரோட்டா கடை உரிமையாளர்

Courtallam Theft case: குற்றாலம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருடிய பரோட்டா கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Courtallam Theft case
வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பரோட்டா கடை உரிமையாளர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:55 PM IST

வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பரோட்டா கடை உரிமையாளர் கைது

தென்காசி: குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் காசிமேஜர்புரம் பகுதியிலும் உள்ள பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து, 7 இடங்களில் தொடர் திருட்டுகள் அரங்கேறி வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்த குற்றாலம் போலீசார் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையிலும், கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையிலும், குற்றாலம் பகுதியில் பரோட்டா கடை நடத்தி வரும் காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி குமார் என்ற நபரை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில் திருப்பதி குமார் தான் திருட்டில் ஈடுபட்டார் என்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் கூறுகையில், "குற்றாலம் பகுதியில் 116 கிராம் தங்க பொருட்கள் திருடு போனதாக ஒரு புகார் வந்ததைத் தொடர்ந்து, குற்றாலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றாலம் பகுதியில் பரோட்டா கடை நடத்தி வரும் காசிமேஜர்புரத்தைச் சார்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருப்பதி குமார் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது விசாரணையில் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், மேலும் 6 இடங்களில் நகைகளைத் திருடியது கண்டறியப்பட்டது. இதுவரை அவரிடமிருந்து 263 கிராம் (33 பவுன்) தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த குற்றவாளி காவல்துறையின் கவனத்திற்கு வராத குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனிப்படையினரின் முயற்சி காரணமாக பல்வேறு வழக்குகள் தொடர்புடைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் குற்றாலம் சீசன் காலங்களில் திருடு போன நகைகள் குறித்து வரப்பெற்ற 17 வழக்குகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏழு வழக்குகள் என மொத்தம் 24 திருட்டு வழக்குகளில் பொருட்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது முழுக்க முழுக்க தனிப்படை போலீசார், குற்றாலம் காவல் துறையினர், தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் முழு முயற்சி காரணமாக இந்த சம்பவத்தின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதின் காரணமாக மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தென்காசி மாவட்டத்தில் பைக் ரேசிங் ஈடுபடும் நபர்கள் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பைக் ரேசிங் குறித்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சினை? திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details