தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலகம் அமைக்கக் கோரி போராட்டம்! - மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
தென்காசி: மாற்றுத் திறனாளிகளுக்கான நல அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் இசக்கி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ. 1000லிருந்து ரூ.3,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலகத்தை தென்காசி மாவட்டத்தில் உடனடியாக உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க... அரசு அலுவலக கழிப்பறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குமானதா?