தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவர்கள் கழிவறைக்குச் சென்றபோது தண்ணீர் குழாய் பகுதிக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று இருப்பதாக உடற்கல்வி ஆசிரியர் நேருதாஸ் கென்னடி என்பவருக்கு மாணவர்கள் தகவல் கூறியுள்ளனர்.
பிடிபட்ட பாம்பு
இதையடுத்து அங்கு வந்த உடற்கல்வி ஆசிரியர் குச்சியின் உதவியைக் கொண்டு மூலம் பாம்பை வெளியே வர வைத்து லாவகமாக மீட்டு பின்னர் காட்டுப்பகுதிக்குள் விட்டார்.
பள்ளிக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்த உடற்கல்வி ஆசிரியர் இதேபோல, கடந்த 10 தினங்களுக்கு முன்பு பள்ளிக்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த நிலையில் அதனையும் உடற்கல்வி ஆசிரியர் லாவகமாகப் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: அரிசியில் விஷம் வைத்த விவசாயி: 7 மயில்கள் மரணம்