தென்காசி:அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இன்று(அக்.19) துவங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. புகைப்பட கண்காட்சியைத் தென்காசி நகர்மன்றத் தலைவர் சாதிர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மக்கள் தொடர்பகம், விளம்பரம் அலுவலர் ஜூலி வரவேற்று பேசினார். மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர் காமராஜ் கண்காட்சியின் நோக்கம் குறித்துப் பேசினார்.
விழாவின் முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய மக்கள் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாத்துரை செய்தியாளர்களிடம் பேட்டியின்போது கூறியதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து நாடு முழுவதும் சுதந்திர தின அமிர்த பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.