தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் காய்கறிச் சந்தையை மீண்டும் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு - காய்கறி சந்தையை மாற்றக் கோரி மனு

தென்காசி : கரோனா ஊரடங்கால் பல மாதங்களாக மூடி கிடக்கும் தினசரி காய்கறிச் சந்தையை மீண்டும் திறக்கக் கோரி வியாபாரிகள், சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் இணைந்து தென்காசி ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தென்காசியில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்க கோரி ஆட்சியரிடம் மனு
தென்காசியில் காய்கறி சந்தையை மீண்டும் திறக்க கோரி ஆட்சியரிடம் மனு

By

Published : Sep 3, 2020, 2:46 PM IST

தென்காசி மாவட்டத்தில் நெல்லை செல்லும் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, கரோனா பரவல் காரணமாக பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இங்கு வியாபாரம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவில் விலக்கு அளிக்கப்பட்டு வழிபாட்டுத் தலங்கள், பேருந்துகள் செயல்பட தொடங்கியுள்ளதால் இந்த பழைய பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் அதிகரிக்கும் என்பதால் சமூக தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள் பழைய காய்கறிச் சந்தைக்கு மீண்டும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் மாவட்ட தலைவர் லூர்த் தலைமையில் வியாபாரிகள் ஒன்றிணைந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் மனு அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details