தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன் கட்டுப்பாடுகளுடன் கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனையில் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இதுவரை 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 96 நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் மக்கள் பயணத்தைத் தவிர்க்கும்பொருட்டு தங்கள் கோரிக்கைகளை collrtks.grievances@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் 9443620761 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும் அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?