தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பஸ்ஸ நிறுத்துறியா! மல்லாக்க படுக்கவா!' - 'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி! - person who got into a drunken brawl in Tenkasi

ஏய் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேருந்துக்குள் செய்த ரகளையை தென்காசியில் போதை ஆசாமி ஒருவர் செய்தது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி!  - வைரல் வீடியோ
'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி! - வைரல் வீடியோ

By

Published : Feb 17, 2021, 7:25 PM IST

சரத்குமார் நடிப்பில் உருவான ஏய் திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சி வரும். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அந்த காமெடி காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. வேட்டியை முட்டிக்கு மேல் வரை தூக்கி கட்டி பேருந்துக்குள் வடிவேலு செய்யும் ரகளை வேற லெவலில் இருக்கும். அந்த திரைப்படக் காட்சியைப் போலவே தென்காசியில் முதியவர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சாலையில் சென்ற அரசு பேருந்தை வழி மறித்து போதையில் ரகளையில் ஈடுபட்ட முதியவரை அப்பகுதி மக்கள் எவ்வளோவோ தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர் தொடர்ந்து ஓட்டுநரிடம் மல்லுக்கட்டியுள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த ஓட்டுநர் பேருந்தை இயக்க முற்பட்டபோது, அவர் பேருந்தின் முன்பக்கத்தில் ஏறி இறுக்கமாக பிடித்து கொண்டு பயணம் மேற்கொண்டார்.

'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி! - வைரல் வீடியோ

பின்னர் ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்திவிட்டு போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் வீடியோவாக படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது இது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:

இணையத்தை கவர்ந்த புலி சண்டை! வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details