தென்காசி: கரோனா பரவல் அச்சத்தின் காரணமாகப் பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அரசு அனுமதி மறுத்திருந்தது. தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள தடுப்பூசி விழிப்புணர்வால் கரோனா பரவல் பெருமளவு குறைந்துவருகிறது.
இந்நிலையில் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (டிச.20) முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எட்டு மாதங்களுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:Protest:போராட்டத்தைக் கைவிட மறுத்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் கைது