தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்கு எதிராக பல மாதங்களாக பல்வேறு கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்கள் செய்து வருகின்றனர். ஆனாலும் கடையம், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான கனிம வள கொள்ளை தினசரி நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முறையான அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்பொழுது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கனிம வள கொள்ளையை எதிர்த்து தேமுதிக கட்சியின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக வந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான கனிம வள கொள்ளை ஏற்பட்டுள்ளது இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆனாலும் தற்போது வரை அந்த பகுதியில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. மேலும் கடையம் ஆகிய பகுதியில் இருந்தும் ஏராளமான கனிம வள கொள்ளை ஏற்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நேற்று சுமார் பத்திருக்கும் மேற்பட்ட டிராக்டர்கள், டிப்பர்கள் மூலமாக கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் கனிம வளக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.