தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் செலஃபோன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - செலஃபோன் கோபுரம்

தென்காசி: கரிசலூர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் செல்ஃபோன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Public protest against the construction of the cell phone tower
செல்போன் கோபுரம்

By

Published : Oct 23, 2020, 4:45 PM IST

தென்காசி மாவட்டம் மகிழ்வண்ணநாதபுரம் அருகேவுள்ள கரிசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில், தனியார் (ஜியோ) செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனையறிந்த அப்பகுதி மக்கள், செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோபுரம் அமைக்கும் இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாவூர்சத்திரம் காவல் துறையினர், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details