தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மட்டன் கடை ஊழியர் கொலையில் காவல் துறை அலட்சியம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - People besieging the Tenkasi collector's office regarding murder case

தென்காசி: காவல் துறை அலட்சியத்தைக் கண்டித்து, கல்யாணிபுரம் பகுதி மக்கள் திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மட்டன்
மட்டன்

By

Published : Dec 16, 2020, 8:07 AM IST

Updated : Dec 16, 2020, 9:04 AM IST

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுடலைமணி (27). இவர் பாவூர்சத்திரத்தில் மட்டன் கடையில் பணியாற்றிவந்தார். இரு தினங்களுக்கு முன்பு, பணியை முடித்துவிட்டு நீண்ட நேரமாக வீட்டிற்கு மாரியப்பன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இறுதியாக பாவூர்சத்திர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆவுடையானூர் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிலையில் சுடலைமணி சடலமாகக் கிடந்துள்ளார். தகவலையடுத்து, விரைந்துவந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஆனால், குற்றவாளியை இரண்டு நாள்கள் ஆகியும் காவல் துறை பிடிக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாக, மாரியப்பன் உறவினர்கள், நண்பர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

பின்னர், ஆட்சியர் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்துசென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Dec 16, 2020, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details