தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கார்த்திகா ஸ்டோர் என்ற துணிக்கடை புதிதாகத் திறக்கப்பட்டது. கடை திறப்பு விழாவிற்கு அச்சிடப்பட்ட விளம்பர சுவரொட்டியில் முதலில் வரும் 3000 பேருக்கு 50 ரூபாய்க்கு இக்டா சில்க் சாரிஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மக்கள் கூட்டம் கூடியது. பண்டிகை காலம் என்பதால் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் தீயாய் பரவியது. இதன் காரணமாக கரோனா விதிமுறை மீறப்பட்டது.