தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு! - pavoorchatram railway station

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு இரவு நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு!
பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு!

By

Published : Feb 17, 2023, 12:35 PM IST

தென்காசி: பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று (பிப்.16) இரவு வழக்கம்போல் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கேட் கீப்பர் அறைக்குள் மர்ம நபர் புகுந்துள்ளார். அப்போது அவர், பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

மேலும் அப்பெண் ஊழியரை, கேட் கீப்பர் அறையில் இருந்த போன் ரிசீவரால் மர்ம நபர் தலையில் தாக்கி உள்ளார். இதனையடுத்து அந்த பெண் ஊழியர் சத்தம் போட்டதைத் தொடர்ந்து, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அதேநேரம் பலத்த காயம் அடைந்த பெண் ஊழியர், பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ரயில்வே கேட் கீப்பரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் ஆகியோர் ரயில்வே கேட் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில இளைஞர்கள் பலர், ரயில்வே கேட் அருகே செட் அமைத்து தங்கி உள்ளனர். எனவே பெண் ஊழியரின் பணி நேரத்தை நோட்டமிட்டு, இவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாவூர்சத்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் தென்காசி - திருநெல்வேலி பிரதான சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை: இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details