தென்காசிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3ஆவது மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி திமுக உறுப்பினர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி வாக்கு வாதம் எழுந்த நிலையில் இதனை மறுத்த மாவட்ட ஊராட்சி தலைவர் கூட்டம் நிறைவடைந்ததாக கூறி பாதியில் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இது குறித்து மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி மாவட்ட ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் உறுப்பினர்களிடம் ஏழு மன்ற பொருளை வைத்து ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் தற்போது அந்த குறிப்பானது 13ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் தலைவி தன்னிச்சையாக சுமார் 1.5 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார்.