தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை! - தென்காசி அண்மைச் செய்திகள்

தென்காசி : கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்காசியில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை!
தென்காசியில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க கோரிக்கை!

By

Published : May 19, 2021, 8:26 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டமான தென்காசியில், கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குண்டாறு, அடவிநயினார், கருப்பா நதி ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதே போன்று முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பலத்த சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் சேதமடைந்து வருகின்றன.

செங்கோட்டை, தஞ்சாவூர் குளத்து புரவு பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் செய்வதறியாது தவித்து வருகின்றனர். சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையம் படிங்க : மெல்ல குறையும் கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் நிலைமை சீராக சுகாதாரத்துறைச் செயலாளர் கூறும் வழி என்ன?

ABOUT THE AUTHOR

...view details