இந்தியாவில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இங்கு பயிர் செய்யப்படும் வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில் பெரும் மழை பெய்வது வாடிக்கையாக இருந்துவருகிறது.
இதனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக அவ்வப்போது உயர்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பிரதான மார்க்கெட்டான காமராஜர் காய்கறி சந்தையில் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.