தென்காசி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இன்று (ஜூலை27) திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மற்றொருவரை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குற்றாலத்தில் கொட்டித்தீர்த்த மழை; திடீர் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு! - குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம்
தென்காசியில் கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒருவர் உயிரிழப்பு
மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழையால் பொதுமக்கள் யாரும் ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4 மாதங்களுக்கு பிறகு கவியருவியில் குளிக்க அனுமதி
Last Updated : Jul 27, 2022, 8:04 PM IST