தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோதனைச்சாவடியில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல்! - TN Assembly Elections 2021

தென்காசி: தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச் சாவடியில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

toll gate
toll gate

By

Published : Mar 2, 2021, 6:16 PM IST

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளில் தற்காலிகமாகச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு பரிசுப் பொருள்கள், பணப்பட்டுவாடா குறித்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.

இதில் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில் மாநில, மாவட்ட எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையின்போது, காய்கறி வியாபாரி ஒருவர் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.

செங்கோட்டை வட்டாட்சியர் பறிமுதல்செய்த பணத்தை உரிய ஆவணம் அளித்த பின்னர் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

ABOUT THE AUTHOR

...view details