தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலங்குளத்தில் இடப் பிரச்னையில் ஒருவர் வெட்டி படுகொலை! - thenkasi news

தென்காசி: ஆலங்குளத்தில் இடப் பிரச்னையில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இட பிரச்சனையில் ஒருவர் வெட்டி படுகொலை
ஆலங்குளத்தில் இட பிரச்சனையில் ஒருவர் வெட்டி படுகொலை

By

Published : Apr 1, 2021, 8:10 AM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் என்எல்சி சோலார் மின் நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை, கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (51) என்பவர் மேலாளராக வேலைப் பார்த்து வந்தார். அப்போது திடீரென அலுவலகத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியத நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று தியாகராஜனை சரமாரியாக வெட்டியது.

இதைத் தடுக்க முயன்ற ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்த ஊழியர் கிருஷ்ணன் (40) என்பவரையும், அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் துரையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தியாகராஜனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். நிலப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ராமநாதபுரம் அருகே இளைஞர் கொலை: நீதிமன்றத்தில் ஐவர் சரண்

ABOUT THE AUTHOR

...view details