தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் இருந்து ஆண் சடலம் மீட்பு - காவல் துறையினர் விசாரணை! - One Dead Body Rescued

தென்காசி: குளத்தில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசியில் குளத்தில் ஆண்சடலம் மீட்பு  ஆண்சடலம் மீட்பு  மத்தளம்பாறை  குளம்  One Dead Body Rescued From pond In thenkasi  Pond  Mattalamparai  One Dead Body Rescued  Dead Body
One Dead Body Rescued

By

Published : May 18, 2020, 4:57 PM IST

தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இன்று வழக்கம்போல் பொதுமக்கள் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர் காவல் துறையினரின் விசாரணையில் குளத்தில் இறந்து கிடந்த நபர் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (42) என்பது தெரியவந்தது.

பால்ராஜ் குளத்தில் இறங்கும் போது தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காதல் தகராறில் இளைஞர் கொலை: மூவர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

ABOUT THE AUTHOR

...view details